சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜூலை 09, 2010

இருவழிப்பாதை

நேசிப்பதை விட சுகமானது
நேசிக்கப்படுவது.
தனிமையான மனவெளியில் இன்றும்
என் கைகள் கோர்த்து துணைக்கு வருகிறது உன் நினைவு.

கூரையின் விளிம்பில்
வழியும் மழை நீர் அளாவுதல்
பனி படர்ந்த அதிகாலை
கனத்த போர்வையின் போர்த்தல்
சோர்ந்த போதுகளில்
சூடான தேனீர் அருந்தல்
பௌர்ணமி இரவில்
கடற்கரை வெளியில்
இப்படி
நான் வாழ்ந்த நிமிடங்களின் பட்டியலில்
கூடுதலானது உன்னோடான சந்திப்புகளும்

நீயற்ற பொழுதுகளை 
நீந்திக் கடக்க கட்டுமரங்களாயும்
முடிவற்ற நிலவெளியில்
நடந்து கடக்க கை கோர்த்து கதை சொல்லி நடப்பதுவும்
உன் நினைவுகள் 

பாதைகள் வேறு
பயணங்கள் வேறு என்ற போதிலும்
எனக்குத்தெரியும்
உன் மன ஆழத்தில் குமிழியிடும் என் நினைவுகள்
நேசமென்பது பெரும்பாலும் இருவழிப்பாதையாகிவிடுகிறது.






5 கருத்துகள்:

soundr சொன்னது…

இன்னும் சிறப்பாக்க முயலுங்களேன்.


http://vaarththai.wordpress.com

Thekkikattan|தெகா சொன்னது…

ம்ம்ம் உண்மை... உணர்ந்து கொடுத்திருங்கீங்க :)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நேசம் என்றுமே இருவழிப்பாதைதான்.

Katz சொன்னது…

அருமை..

Thenammai Lakshmanan சொன்னது…

பாதைகள் வேறு
பயணங்கள் வேறு என்ற போதிலும்
எனக்குத்தெரியும்
உன் மன ஆழத்தில் குமிழியிடும் என் நினைவுகள்
நேசமென்பது பெரும்பாலும் இருவழிப்பாதையாகிவிடுகிறது//

மிக அருமை சகோதரி.. சந்திக்கத்தான் இயலாமல் போய்விட்டது..