சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், ஜனவரி 15, 2013

சூழ்நிலைக் கைதிகள்



பால் நிலவின் ஒளி ஒரு ஓடையைப்போல்
பூமியை நனைத்துக்கொண்டிருக்க
நாய்கள் குரைக்கும் நடுநிசிப்பொழுதில்
தீனமாய் முனகத்தொடங்குகிறது என் ஒரு யுக மௌனம்

என் மௌனம் அலறத்துவங்கும் முன்
ஒரு அழுத்தமான இமை அசைவில் அடக்கிவைக்கிறாய்.
என் மௌனங்களை மொழிபெயர்த்தால்
வெளிப்படும் உன் அன்பின் முரண்பாடுகள்.

கண்ணுக்குத்தெரியாத கட்டுகளுடன்
நடனமாட விடுகிறாய் சுதந்திர மேடையில்.
என் இடை கோர்த்து நடமாடும் உன் கரங்களை
உதறித்துறக்க முடியா என் கௌரவம்.

கட்டுகள் தெறிக்காமல் ஆடும் கவனத்தில்
களைத்து விழும் பொழுதில்
தாங்கிப்பிடிக்கும் உன் அணைப்பு
என்னால் அவிழ்த்தெறிய முடியா அடிமைச்சங்கிலி.

3 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை சாந்தி.

ஜோதிஜி சொன்னது…

நலமா? ஊருக்கு வரக்கூடிய சூழ்நிலை அமைந்தால் ஜனவரி 27 விழாவுக்கு (திருப்பூருக்கு) வாங்க.

மாதவன் சொன்னது…

சூப்பர்