சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

சொற்களின் வலிமை


கண்ணகி உடைத்த சிலம்பின்
மாணிக்கப்பரல்களாய்
சிதறிக்கிடக்கிறது சொற்கள்
என் அறையின் வெளியெங்கும்

சில சொற்கள் தீயாய்
சில சொற்கள் பனியாய்
வெயிலாய், மழையாய், நோயாய், மருந்தாய்
நொய்மையாய், வலுவாய்
சொற்கள் சொற்கள்.

.தூங்காத இரவொன்றில்,
எனைக்கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான
சொற்களை வசமாய்க் கோர்க்கும் வேளையில்,
பிணங்கிச்சிணுங்குகிறது நான் தீண்டாத சொற்கள்.
சொற்களுக்குத் தெரியாது அதன் வலிமை.
எனக்குத்தெரியும்
எரிகணைச்சொற்களின் தாக்கமும்
நம்பிக்கை வார்த்தைகளின் ஆக்கமும்

எறியப்படும் சொற்கள் பூக்களாக இல்லாவிடினும்
முட்களாகிவிடக்கூடாதே என்ற கவனத்தில் நான்…

1 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

// சொற்களுக்குத் தெரியாது அதன் வலிமை.//

உண்மைதான்.

//முட்களாகிவிடக்கூடாதே என்ற கவனத்தில் நான்…//

அருமை. நல்ல கவிதை சாந்தி.

எறியப்படும் வார்த்தைகளைப் பற்றி சமீபத்தில் நானும் எழுதினேன் ‘யுத்தம்’ என. இணைய இதழில் வெளியாகி விட்டது. விரைவில் வலைப்பூவில் பகிர்கிறேன்.