சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், பிப்ரவரி 01, 2010

நானொரு பெண்ணென்பதால்.....

எப்போதும்
என் செயல்பாடுகளின் அர்த்தங்களும்
என் நிலைப்பாடுகள் குறித்த கேள்விகளும்
நான் கடந்துவரும் ஒவ்வொருவருக்குள்ளும்
வெவ்வேறானவை.

என்னைப்பற்றிய
புதிர்களும்,புனைவுகளும்
இப்படி,அப்படி என்கிற ஆருடங்களும்
என் கண்வழி பயணித்து,
என் மனத்தைத் துழாவும் பார்வைகளும்
என்னை, என்னிடமே அந்நியமாக்கும்.

நான்
நடைபழகிய நாள் முதல்
என்
நடையும், பேச்சும்
பொதுவெளி நடவடிக்கைகளும்
எனக்கான அளவீடுகள்.

நான் யாரென அறியும்
அறிதலின் ஆர்வம்.
மூளையின் அணுக்களில்
நுணுகிக்கிடக்கும் குணத்தின் வேர்களை
என் மனத்தின் மூலையில்
முடங்கிக்கிடக்கும்
எண்ணங்களின் வடிவங்களை
என் பதில்களாய் வரவைக்கும் கேள்விகள்.

நான்
சீதையா? நளாயினியா?
கண்ணகியா? ஆதிரையா?
ஆராயும் கண்கள்.
அங்கே
எனது சுயம்வரத்தில் காத்திருப்பது
ராமனா? ராவனனா?
நளனா?கோவலனா?
யாருக்கும் கவலையில்லை.
எரிவதும்,எரிப்பதும்
தேசியச்சடங்குகளாகிப்போன இங்கே
சொல்லித்திரிகிறார்கள்
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்".

6 கருத்துகள்:

Paleo God சொன்னது…

நியாயமான கோவம்..

கடைசி பத்தி அபாரம்..

கண்மணி/kanmani சொன்னது…

பெண்ணென்பதால் தோற்றுப் போகனும் என்பதில்லை.துணிவு கொண்டு ஜெயிக்கலாம்.
நிச்சயம் நளாயினியாக வேண்டாம்.
உரிமைக்குக் குரல்கொடுக்கும் ஜான்சியாக இருப்போம்

சந்தனமுல்லை சொன்னது…

:-)

ஆதிரை யாருங்க?

மதுரை சரவணன் சொன்னது…

super. paraattukkal. nalla pathiu kobamaa ekkamaa?

madurai saravanan சொன்னது…

super. paraattukkal. nalla pathiu kobamaa ekkamaa?

தமிழ் உதயம் சொன்னது…

தெரிந்தோ, தெரியாமலோ- கண்ணுக்கு தெரியாத விலங்குகள் நம்மை பூட்டியுள்ளன. விடுபட முடியாத கோவம் கவிதைகளாக, ஆழமான கவிதை.