வெளிநாடு வாழ் தமிழ் நண்பர்களே! குழந்தை வளர்ப்பு பற்றி பேசும் போது பெரும்பாலும் தாய்ப்பாலின் மகத்துவம், சத்துணவு, வளர் இளம் பருவக்குழந்தைகள் கவனிப்பு, என்று நிறையப் பேசுவோம். ஆனால் தாய் மொழியின் அவசியத்தை உணர்த்துவதில்லை. குழந்தைகளை அவர்களின் எதிர்கால நலன் கருதி ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்கிறோம். வெளியில் நாம் எந்தப்பகுதியை சார்ந்து இருக்கிறோமோ அந்த மொழியில் பேசுகிறார்கள். குறைந்த பட்சம் வீட்டில் தமிழில் பேசுங்கள். தமிழ் படிக்க கற்றுக் கொடுங்கள். தமிழ் தாய்மொழி,தாய் மொழிபற்று, தமிழ் உயர் தனிச்செம்மொழி இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.
பெரும்பாலும் நம் குழந்தைகள் மேல் படிப்பு (அந்தமான் தமிழர்களைப் பொறுத்தவரை) திருமணம், உறவினர் சந்திப்பு என்று தமிழகம் செல்ல வேண்டி உள்ளது.அந்தமான் தமிழ்க்குழந்தைகளின் இந்தி கலந்த தமிழ், வெளி நாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் வேற்று மொழி கலந்த தமிழ் நம் குழந்தைகளை கேலிக்கு உள்ளாக்குகிறது. அத்தோடு நம் உறவுகள் பெரும்பாலும் தாத்தா, பாட்டியர் தன் பேரன்,பேத்தியர்களின் மொழி புரியாது தவிப்பிற்குள்ளாகிறார்கள்.
அழகாக உடுத்தத்தெரிந்த நம் குழந்தைகளுக்கு பேருந்தில் எழுதி உள்ள ஊர்ப் பெயர்களைப் படிப்பதற்கு அடுத்தவர் உதவி தேவைப் படுகிறது. எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பேச, படிக்க, கொஞ்சம் எழுதவும் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அதோடு இங்கு அந்தமான் தமிழர் சங்கத்தில் தமிழ் கற்பித்தல் மையம் இயங்கி வருகிறது. இங்கே தமிழ் கற்க விரும்பும் அனைவருக்கும் தமிழ் இலவசமாக சொல்லிக்கோடுக்கப்படுகிறது.ரோமனில் ரோமனாக இரு என்பது பொன் மொழி. அதன்படி தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டுக் குடிமக்களாகவே மாறி விடுகின்றனர்.ஆனால் ரோமனில் ரோமனாக இருக்கத் தெரிந்த நமக்கு தமிழ் நாட்டில் தமிழனாகவும் இருக்கத் தெரிய வேண்டாமா? யோசிப்போமா தமிழ் நண்பகளே!
1 கருத்துகள்:
வணக்கம் அம்மா
தங்கள் தமிழ்ப்பற்று மகிழ்ச்சி தருகிறது.
தமிழ் நினைவுடன் இருக்கும் தங்களைப் போற்றுகிறேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
கருத்துரையிடுக