சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 31, 2009

தொலைக்காட்சி - நம்மை பலிகேட்கும் அசுரன் உஷார்! பெண்களே!

       இன்று தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி பெண்களின் நேரத்தைத் தின்னும் அசுரனாக அவதாரம் எடுத்துவிட்டது.சில காலத்திற்கு முன் விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். தொலைக்காட்சி குறித்தது.அதன் சாரம் இது தான்.உங்கள் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன் ஒரு விருந்தாளி வந்தார்.நடுவீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசினார்.சிரித்தார்.நீங்களும் ரசித்தீர்கள்.இன்று அதிக உரிமை எடுத்துக்கொண்டு எதைப்பேச வேண்டும்,எதைப் பேசக்கூடாது என்கிற விவஸ்தையில்லாது பேச செய்வதறியாது தவிக்கிறீர்கள் என்பது போல இருந்தது அந்தக்கட்டுரை.நமக்குத்தான் எதை எங்கு வைப்பது என்று தெரியாமல் இடம் கொடுத்து அதற்கு அடிமையாகி விட்டோம்.இன்று பெண்கள் தமது உறவுகளை விட அதிகம் தொலைக்காட்சி தொடர்களுடன் தான் உறவாடுகிறார்கள்.தொடர்களின் கதாபாத்திரங்களைத்தான் ஆதர்ச வழிகாட்டிகளாகவும் கொள்கிறார்கள்.அந்தமானில் இருந்து ஆசைஆசையாய் உறவுகளைப்பார்க்கவென்று தாய்த்தமிழ்நாடு வந்தால் அங்கு பேசுவதற்குக் கூட யாருக்கும் நேரமில்லை. என் அம்மாவிடம் "ஏம்மா? இப்பத்தான் நாங்கள்லாம் வந்திருக்கம்ல.இப்ப டி.விய அமத்திப்போடுங்களேன்னு" சொன்னால் என் அம்மா,"ம்ம்ம்.நீங்க நாளக்கழிச்சு நாளன்னிக்கு ஓடிருவீங்க! எனக்கு இது தான் தொண. அதொடயில்ல.அப்பரம் எனக்கு கதையும் புரியாது போங்கடி" என்பார்கள்.அது சரி என்று எங்கள் அம்மா தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டால் விளம்பர இடை வேளையின் போது மட்டும் தான் பேசுவோம்.பேச முடியும்.எல்லா வீடுகளிலும் இதே நிலைதான்.இதற்கு அந்தமானும் விதிவிலக்கல்ல.

         இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு சேலை எடுக்க இரு தோழியர் வந்தனர். எல்லாச் சேலையையும் புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் ஏதோ விவாதம்.சொந்த விவகாரம் போலும் என நினைத்துத் தேநீர் தயாரிக்க அடுப்படி போனதும் விவாதம் தீவிரமடையவே ஒன்றும் புரியவில்லை.நான் வந்ததும் ஒரு தோழி,"சரி விடுங்க.நமக்குள்ள எதுக்கு சச்சரவு?இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியப்போகுது!"என்றபடி,"அண்ணி! டிவியப் போடுங்க" என நான்,"எங்க வீட்டுல டி.டி (Doordarshan) மட்டுந்தான்ப்பா இருக்கு" என்றதுதான் தாமதம் அவர்கள் இருவரும் தேநீரையும் பருகாது தேர்ந்தெடுத்த புடவைகளை தனியே வைக்கச்சொல்லிப் பறந்துவிட்டார்கள்.வீடெல்லாம் புடவைகள் மயம்.இது ஒரு உதாரணம் தான். 80% பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.சமூக அக்கறையற்ற தொடர்களால் இளம் தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவது,உறவுகளுக்குள் நஞ்சு கலப்பது,ஆரோக்கியக்கேடு,மன அழுத்தம்,உடல் பருமன்,வெளியுலகம் பற்றிய அவதானிப்பற்ற நிலை போன்றவைகளை சத்தமில்லாது அரங்கேற்றி வருகிறது தனியார் தொலைக்காட்சிகள்.இதைவிட ஒரு படி மேல் சில தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை இந்தத் தொடர் ஆரம்பிக்கிறதுக்குள்ள படிங்க என்றும்,அந்த ரூம்ல நீங்க படிங்க,நா சத்தம் கொறச்சுவச்சு இந்த ரூம்ல டிவி பாக்குறேன் என்பதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.அதே போல அந்தமான் தமிழ்ப்பெண்களில் பொது நிகழ்ச்சிகள்,இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தருபவர்கள்,இலக்கிய நிக்ழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மிக சொற்பமானவர்களே!

                சில பெண்கள் அவன் அப்புடி செஞ்சிருக்கக்கூடாது.இவ செஞ்சது சரியில்ல இப்படிப் பேசுவார்கள்.நாம் தலையிடக்கூடாது. தலையிட்டால் முழுக்கதையும் நாம் கேட்க வேண்டி வரும்.யாரும் அந்தமானில் சொந்த பந்தங்களைப்பார்க்க வருகிறீர்களா? முக்கியமாக சகோதரிகளை,மகள்களை..... உஷார்! உஷார்!.வந்ததும் இந்தத் தொடர் பாத்தியா அது பாத்தியா என்று பெண்கள் கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவது உத்தமம். தவறினால் அந்தத் தொடர் நாயகியின் அணிமணிகளை நீங்கள் அன்பளிப்பு தரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள்.ம்ம் இப்புடிக்கிண்டல் பண்றீகளே? உலகத்துல இல்லாத்ததையா சொல்றாக? என்பார்கள்.ஏன் ஒரு குடும்பத்திலும் சுமுகமான உறவுகள் இல்லையா?.மாமியாருக்கு விஷம் வைக்கும் மருமகளும்,கர்ப்பிணி மருமகளை மாடிப்படிகளில் உருட்டிவிடும் மாமியார்களும் தமிழ்நாட்டில் மலிந்து போய்விட்டார்களா என்ன? இதைவிட ஒன்று! தொலைக்காட்சி தொகுப்புரையாளர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் உடையை தன் மக்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ வாங்கித்தரும் தாய்கள்.அவர்கள் மூடிய வாகனங்களில் பயணிப்பவர்கள். நம் குழந்தைகள் தினம் சாலைகளில் நடந்து செல்பவர்கள்.

         நம் சமூகத்தில் கிட்டத்தட்ட கடந்த பத்து,பதினைந்து வருடங்களில் தான் பெண்கள் முன்னேற்றமும்,வெளியுலகத் தொடர்பும் அதிகமாகியிருக்கிறது. ஆண்கள் அதைப் பார்த்து,அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு சில காலம் எடுக்கும்.அதுவரை படிப்படியாக மாற்றங்களை வசப்படுத்திக்கொள்வது தான் விவேகம்.நமது பழமையும்,கலாச்சாரமும் மாறாது புதுமைகளைக் கைகொண்டால் நமக்கு பாதுகாப்பும் மன நிம்மதியும் கிட்டும்.சமூக அக்கறையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள். நாம் என்னவோ வேலையற்ற வெட்டிகள் என்பது போலவும்,இவர்கள் எது கொடுத்தாலும் நாம் பார்ப்போம் என்ற நமது அறிவுத்திறனை சோதிக்கும் இவர்களுக்கு நாம் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்காட்ட வேண்டாம்.அப்படி நான்கு தொடர் எடுத்து நஷ்டப்பட்டு மண்ணைக்கவ்வினால் அவர்களது சிந்தனையும் சீர்பெறுமல்லவா? உங்கள் ஆதரவை சமூக அக்கறையுள்ள தொடர்களுக்குத் தாருங்கள்.நல்ல புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.அது நமக்குள் ஆக்கும் திறனையும்,கற்பனை வளத்தையும் அதிகரிக்கும்.நாம் பொருளாதார ரீதியாக வளர்வது உண்மையான வளர்ச்சியல்ல. ஆன்ம பலம் பெருக்கி,அறிவுச்சேமிப்பை உயர்த்தும் வளர்ச்சிதான் நம்மை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் உண்மையான வளர்ச்சி.

அடிமைப்பெண்கள்

வாலிபத்தின் வாசலில்
வசந்தக் கனவுகளில் நான்..
பெண்பார்க்கும் படலங்கள் நிறைவுற்று
வரமாலை தந்து வந்தாள் மகாலக்ஷ்மி.

பின் தூங்கி முன்னெழுவார் பெண்கள்.
என்னவளோ பின் தூங்கி பின் எழுந்தாள்.
காலைச்சிற்றுண்டி கடைகளில்.
மதிய உணவு அலுவலக உணவகத்தில்.
மாலை மல்லிகை மணக்க வீடு வந்தால்
என்னவள்
அழுத முகமும் வீங்கிய கண்ணும்
தொலைக்காட்சித்தொடர்களின் உபயம்.
தட்டில் சோறிட்டு
காட்சி கண்டு குழம்பூற்றியது என் கைகளில்.
விளம்பர இடை வேளையில்
இன்னொரு காட்சி மாற்றி
அங்கும் இடைவேளை என்றால் தான்
அதிர்ஷ்டம் எனக்கு அடுத்துச்சோறு கிடைக்கும்.

பட்டுப்புடவை பரிசு தந்தால்
மெட்டி ஒலிநாயகியின் கெட்டி ஜரி இல்லையென்றாள்
நாலு கடை தேடி
நல்ல நகை வாங்கி வந்தால்
என் அபிமானத் தொடர் நாயகியினுடையது நல்ல வடிவு என்றாள்.

இப்படி
நடை ஒரு நாயகி
உடை ஒரு நாயகி
மொழி ஒரு நாயகி
அவள்
அலங்காரம் ஒரு நாயகி.

ஏ! பெண்குலமே!
காலம் மாறுகிறதென்று
கடலும் வானும் கூட மாறுகிறதே!
என்றும்,எப்போதும்,எதற்காவது
அடிமையாவதே உனக்கழகோ?

மாற்றம் கொள்.
சுயம் வளர்க்கக் கல்.
பாரதியே! எழுந்து வா!
உன் புதுமைப்பெண்களை மீட்க...

அறிவியல் கலைச்சொற்கள்


இந்த அறிவியல் கலைச்சொற்களை அனுப்பிய அன்புச்சகோதரர்
உயர் திரு.கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கு நன்றி!


absolute address————————>தனி முகவரி
absolute cell address ——————>தனித்த நுண்ணறை முகவரி வழங்கல்
access ————————>அணுக்கம், அணுகல்
accuracy ————————>துல்லியம்
action ————————>செயல்
active cell ————————>இயங்கு கலன்
address modification ————————>முகவரி மாற்றம்
address ————————>முகவரி
addressing ————————>முகவரியிடல்
album ————————>தொகுப்பு
algorithm ————————> வழிமுறை
algorithm ————————> நெறி முறை
algorithmic language ————————> நெறிப்பாட்டு மொழி
alignment ————————> இசைவு
allocation ————————> ஒதுக்கீடு
alphabetic string ————————> எழுத்துச் சரம்
alphameric ————————> எண்ணெழுத்து
alphanumeric sort ————————> எண்ணெழுத்து வரிசையாக்கம்
alphanumeric ————————> எண்ணெழுத்து
alphanumeric ————————> எண்ணெழுத்து
AND gate ————————> உம்மை வாயில்
animation ————————> அசைவூட்டம்
animation ————————> அசைவூட்டம்
anti virus ————————> நச்சு நிரற் கொல்லி
append ————————> பின் தொடர், பின்சேர்
apperarance ————————> தோற்றம்
application ————————> செயலி
application ————————> பயன்பாடு
applications oriented language ————————> பயன்பாட்டு நோக்கு மொழி
applications program பயன்பாட்டு நிரல்கள்
applications programmer ————————> பயன்பாட்டு நிரலர்
applications programming ————————> பயன்பாட்டு நிரலாக்கம்
applications software ————————> பயன்பாட்டு மென்பொருள்
architecture ————————> கட்டமைப்பு
archive ————————> பெட்டகம்
archive————————> ஆவணக்காப்பகம்
area search————————> பரப்பில் தேடல்
arithmetic expression————–> எண்கணிதக் கோவை
arithmetic operation—————> எண்கணித வினை
arithmetic operator—————-> எண்கணித வினைக்குறி
array——————————> வரிசை, அணி
arrow key(direction key)———–> திசைப் பொத்தான்
artificial intelligence————> செயற்கை நுண்ணறிவு
assembler————————–> பொறிமொழியாக்கி
assembly language——————> பொறி மொழி
audio————————> ஒலி
audio——————————> ஒலியுணர்
automated data processing———-> தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
automatic————————–> தன்னியக்க
autopilot————————–> தன்னியக்க வலவன்
auxiliary function—————–> துணைச் செயல் கூறு
axes——————————-> அச்சுகள்
background——————-> பின்னணி
backspace பின்னழிக்க, பின்வெளி
backspace——————–> பின்நகர்வு
bad sector——————-> கெட்ட துண்டம்
bar chart——————–> பட்டை வரைபடம்
bar code———————> பட்டைக் குறிமுறை
bar printer——————> பட்டை அச்சுப்பொறி
bar-code scanner————-> பட்டைக் குறிமுறை வருடி
batch processing————-> தொகுதிச் செயலாக்கம்
bebugging——————–> பிழைவிதைத்தல்
bill————————-> விலைப்பட்டியல்
binary device—————-> இரும நிலைக் கருவி
binary digit—————–> இரும இலக்கம்
binary number—————-> இரும எண்
binary operation————-> இருமச்செயற்பாடு
binary system—————-> இரும எண்முறை
binary———————–> இரும
bit map———————-> பிட்டுப்படம்
bit mapped screen————> பிட்டுப் படத்திரை
bit————————–> நுண்மி, துணு, பிட்டு
blank character————–> வெற்றுரு
block diagram—————-> கட்ட வரைபடம்
block————————> கட்டம், தொகுதி
blog ————————>வலைப்பதிவு
boolean———————-> பூலியன்
boot ————————>தொடக்கு
Brennen- ————————> எரிக்க
browser————————> உலாவி
browsing———————> மேலோடல்
button(key)——————> பொத்தான்
byte————————-> எண்பிட்டு, எண்ணுண்மி
cache memory ————————>பதுக்கு நினைவகம்
caculations——————————> கணக்கீடுகள்
caculations——————————> கணக்கீடுகள்
caculator——————————-> கணிப்பான்
caculator——————————-> கணிப்பான்
calculating——————————> கணக்கிடல்
calculating——————————> கணக்கிடல்
calculator mode————————–> கணிப்பான் நிலை
calculator mode————————–> கணிப்பான் நிலை
cancel———————————-> நீக்கு
cancel———————————-> நீக்கு
capacity——————————–> கொள்திறன்
capacity——————————–> கொள்திறன்
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு
carriage return(CR)————————> ஏந்தி மீளல்
carriage return(CR)————————> ஏந்தி மீளல்
catalog———————————-> அடைவு
catalog———————————-> அடைவு
CD player————————> குறுவட்டு இயக்கி
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி
cell————————————-> சிற்றறை, நுண்ணறை
cell————————————-> சிற்றறை, நுண்ணறை
center————————————> மையம், மையப்படுத்து
center————————————> மையம், மையப்படுத்து
central processing unit(CPU)—————–> மைய செயலகம்
central processing unit(CPU)—————–> மைய செயலகம்
central processor————————-> மையச் செயலி
central processor————————-> மையச் செயலி
channel————————————> தடம்
channel————————————> தடம்
character code—————————-> உருக்குறிமுறை
character code—————————-> உருக்குறிமுறை
character generator———————-> உரு ஆக்கி
character generator———————-> உரு ஆக்கி
character map—————————-> உரு விவரப்படம்
character map—————————-> உரு விவரப்படம்
character recognition——————–> உரு அறிதல்
character recognition——————–> உரு அறிதல்
character set——————————> உருக்கணம்
character set——————————> உருக்கணம்
character string—————————> உருச்சரம்
character string—————————> உருச்சரம்
character வரியுரு
character———————————-> உரு
character———————————-> உரு
characteristic—————————–> படி
characteristic—————————–> படி
chart—————————————-> வரைபடம்
chart—————————————-> வரைபடம்
clear துடை
clear—————————————–> துடை
clear—————————————–> துடை
click சொடுக்கு
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து
client ————————> சேவைக்கான பயன்பாடு.
client வாங்கி
clone—————————————–> நகலி, போலிகை
clone—————————————–> நகலி, போலிகை
close—————————————–> மூடு
close—————————————–> மூடு
closed file———————————–> மூடிய கோப்பு
closed file———————————–> மூடிய கோப்பு
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம்
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம்
code————————> நிரற்தொடர்
code——————————————> குறிமுறை
code——————————————> குறிமுறை
collection————————————-> திரட்டல்
collection————————————-> திரட்டல்
color coding———————————-> வண்ணக் குறிமுறை
color coding———————————-> வண்ணக் குறிமுறை
color graphics——————————- > வண்ண வரைவியல்
color graphics——————————- > வண்ண வரைவியல்
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு
column நிரல், நெடுவரிசை
column—————————————-> நெடுவரிசை
column—————————————-> நெடுவரிசை
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான்
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான்
command————————————-> கட்டளை, ஆணை
command————————————-> கட்டளை, ஆணை
comment————————————-> குறிப்புரை
comment————————————-> குறிப்புரை
common storage—————————–> பொதுத் தேக்கம்
common storage—————————–> பொதுத் தேக்கம்
communication——————————-> தொடர்பு
communication——————————-> தொடர்பு
communications link————————-> தொடர்பு இணைப்பு
communications link————————-> தொடர்பு இணைப்பு
communications processor——————> தொடர்பு செயலகம்
communications processor——————> தொடர்பு செயலகம்
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள்
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள்
communications software——————-> தொடர்பு மென்பொருள்
communications software——————-> தொடர்பு மென்பொருள்
compact disc (CD)————————>இறுவட்டு
compaction————————————> நெருக்கம்
compaction————————————> நெருக்கம்
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி
compare—————————————-> ஒப்பிடு
compare—————————————-> ஒப்பிடு
comparison————————————-> ஒப்பீடு
comparison————————————-> ஒப்பீடு
compilation————————————-> தொகுத்தல்
compilation————————————-> தொகுத்தல்
compiler language——————————> தொகுப்பு மொழி
compiler language——————————> தொகுப்பு மொழி
compiler—————————————–> தொகுப்பி
compiler—————————————–> தொகுப்பி
component————————————–> உறுப்புக்கூறு
component————————————–> உறுப்புக்கூறு
compuserve————————————-> கணிச்சேவை
compuserve————————————-> கணிச்சேவை
computation————————————> கணிப்பு
computation————————————> கணிப்பு
computer code———————————-> கணிப்பொறி நிரல்
computer code———————————-> கணிப்பொறி நிரல்
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல்
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல்
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer user———————————–> கணிப்பொறி பயனர்
computer user———————————–> கணிப்பொறி பயனர்
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு
computer—————————————-> கணிப்பொறி
computer—————————————-> கணிப்பொறி
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல்
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல்
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம்
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம்
computing—————————————-> கணிப்பு
computing—————————————-> கணிப்பு
condition—————————————–> நிபந்தனை, நிலை
condition—————————————–> நிபந்தனை, நிலை
configuration————————> அமைவடிவம்
console————————> முனையம்
continuous scrolling—————————–> தொடர் உருளல்
continuous scrolling—————————–> தொடர் உருளல்
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான்
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான்
control program———————————> கட்டுப்பாட்டு நிரல்
control program———————————> கட்டுப்பாட்டு நிரல்
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு
conversion—————————————> மாற்றம்
conversion—————————————> மாற்றம்
convert——————————————-> மாற்று
convert——————————————-> மாற்று
cookie நினைவி
coordinates————————————–> ஆயத்தொலைவுகள்
coordinates————————————–> ஆயத்தொலைவுகள்
copy holder—————————————> நகல் தாங்கி
copy holder—————————————> நகல் தாங்கி
copy protection———————————-> நகல் காப்பு
copy protection———————————-> நகல் காப்பு
copy———————————————–> நகல்
copy———————————————–> நகல்
cordless————————> தொடுப்பில்லா
core storage————————————-> வளையத் தேக்கம்
core storage————————————-> வளையத் தேக்கம்
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு
cost effectiveness——————————-> விலை பயன் திறன்
cost effectiveness——————————-> விலை பயன் திறன்
costing——————————————–> விலையிடல்
costing——————————————–> விலையிடல்
counter——————————————–> எண்ணி
counter——————————————–> எண்ணி
create———————————————> படை (படைப்பு)
create———————————————> படை (படைப்பு)
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான்
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான்
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல்
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல்
cursor———————————————> சுட்டி
cursor———————————————> சுட்டி
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம்
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம்
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள்
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள்
customize—————————————-> தனிப்பயனாக்கு
customize—————————————-> தனிப்பயனாக்கு
cut————————> வெட்டுக
cut———————————————> வெட்டு
cut———————————————> வெட்டு
cyber————————> மின்வெளி
data————————> தரவு
delete ————————>அழிக்க
design ————————>வடிவமைப்பு
digital————————> எண்முறை
discovery ————————>கண்டறிதல்
driver ————————>இயக்கி
DRM: ————————> காப்புரிமை
edit————————> தொகுக்க
firewall————————> அரண்
floppy ————————>நெகிழ்வட்டு
folder————————> உறை
format————————> வடிவூட்டம், வடிவூட்டு
function————————> செயற்பாடு
gallery————————> காட்சியகம்
graphics————————> வரைகலை
guest ————————>வருனர்
home————————> முகப்பு, அகம்
homepage————————> வலையகம், வலைமனை
icon————————> படவுரு
information————————> தகவல்
interface————————> இடைமுகப்பு
interpreter ————————>வரிமொழிமாற்றி
invention————————> கண்டுபிடிப்பு
IRC————————> இணையத் தொடர் அரட்டை
LAN————————> உள்ளகப் பிணையம்
license————————> உரிமம்
link————————> இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live————————> cd நிகழ் வட்டு
log in————————> புகுபதிகை, புகுபதி
log off————————> விடுபதிகை, விடுபதி
media player ————————>ஊடக இயக்கி
menu————————> பட்டியல்
microphone ————————>ஒலிவாங்கி
network ————————>பிணையம், வலையம்
object————————> பொருள்
offline————————> இணைப்பறு
online————————> இணைப்பில்
package————————> பொதி
password ————————>கடவுச்சொல்
paste ————————>ஒட்டுக
patch————————> பொருத்து
plugin————————> சொருகு, சொருகி
pointer————————> சுட்டி
portal ————————>வலை வாசல்
preferences ————————>விருப்பத்தேர்வுகள்
preview————————> முன்தோற்றம்
processor ————————>முறைவழியாக்கி
program————————> நிரல்
proprietary————————> தனியுரிம
RAM————————> நினைவகம்
redo————————> திரும்பச்செய்க
refresh————————> மீளேற்று
release ————————>வெளியீடு
repository ————————>களஞ்சியம்
row ————————>நிரை, குறுக்குவரிசை
screensaver ————————>திரைக்காப்பு
server————————> வழங்கி
settings ————————>அமைப்பு
shortcut ————————>குறுக்குவழி
shutdown————————> அணை
sign in————————> புகுபதிகை, புகுபதி
sign off ————————>விடுபதிகை, விடுபதி
skin ————————>ஆடை
space————————> வெளி, இடைவெளி
speaker————————> ஒலிபெருக்கி
spreadsheet ————————>விரி தாள்
subtitle ————————>உரைத்துணை, துணையுரை
system————————> கணினி
tab————————> தத்தல்
table ————————>அட்டவணை
terminal ————————>முனையம்
theme ————————>கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail————————> சிறுபடம்
undo ————————>திரும்பப்பெறுக
update————————> இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade————————> மேம்படுத்து, மேம்படுத்தல்
URL————————> முகவரி
version————————> பதிப்பு
video ————————>நிகழ் படம்
view ————————>பார்க்க
virus ————————>நச்சு நிரல்
volume ————————>ஒலியளவு
wallpaper————————> மேசைப்பின்னணி
window————————> சாளரம்
wireless ————————>கம்பியில்லா
wizard————————> வழிகாட்டி
worksheet ————————>பணித் தாள்
ஃப்ளாஷ் டிரைவ் ————————> Flash Drive
அகலப்பட்டை ————————> இணைப்பு (Breitband)
அலுவலகப் பயன்பாடு ————————>Office Application like MS word
அழித்தல்————————> Deletion, Removal
அழிப்பான், எரேசர்————————> Eraser
அனுமதி ————————> Permission
ஆவணங்கள் ————————> Documents
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ————————> IE – Internet Explorer
இணைய இயங்குதளம்————————> Web Operating System
இயக்கிகளை————————>(drivers)
இயங்குதளங்களிலும் ————————> Windows XP
இயங்குதளம் – ————————> Operating System

உலவி————————> Browser
உலவி – ————————>Web Browser
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்-————————>—Digital Rights Management
ஐகான்————————> Icon
ஒலிப்பான்+ஒலிவாங்கி ————————>- Head phone with Mic
ஒலிவட்டுகள்————————> (Compact Disk)
ஒளியிழைகளைக்கான————————>(Lichtleiter)
கடவுச்சொல் ————————>- Password
கடனட்டை -————————> Credit Card

காணொளி – ————————>Video
குறுக்கு தட்டாச்சு-————————>Shortcut
கையடக்கக் கணினி, கருவிகள் -————————> PDA – Personal Digital Assistant, Hand held devices
கோப்பு————————>File
கோப்புகள் -————————> Files
கோப்புப்பகிர்வான் -————————> File Sharing
சிடியில் எரித்தல் ————————>- CD Burning
சுட்டிகளில் ————————>(links)
செயலியை————————>(programm)
செல்பேசி ————————>- Mobile / cell phone
சொடுக்கி-————————> klick
டீம்வியூவர் -————————> Team viewer
தகவல் ————————>: Information, Data
தர முயர்த்திகளையும் ————————>(Updates)
தரவிறக்கம் -————————> Download
தரவுத்தளமாக————————>(Database)
நிறுவுதல் ————————>- Installation
நினைவகம் ————————>- memory (RAM)
நீட்சிகள்————————> (Firefox add-ons)
பகிரப்பட்ட கோப்புகள் -————————> Shared Files
பணிச்சூழல் -————————> Working Environment
பயன்பாடுகள் -————————> Software Applications
பயனர் கணக்கு -————————> User Account
பார்க்க -————————> Read
பீட்டா ————————>- Beta
பூட் -————————> Boot – Startup
பென் டிரைவ் – ————————>Pen Drive
பேபால் -————————> Paypal
மடிக்கணினி -————————> Laptop
மடிக்கணினி :————————> Laptop
மாய -————————> Virtual
மாற்றியமைக்க -————————> Edit
மீட்பான் ————————>: Recovery tool
முரண்பாடு ————————>- incompatible
மூலவரைவு :————————> Source Code
மென்நூல்————————>E-book

மென்பொருள்————————>
மென்பொருள் -————————> Software Application
மைக்ரோசாப்ட் ஆபீஸ் ————————>- Microsoft Office
மைக்ரோப்ராசசர் ————————>- Micro Processor
லைவ் -————————> Live
வருடச் சந்தா ————————>- Yearly fee
வரைகலை ————————>(graphics)
வன்பொருள்————————>Hardware
வன்வட்டு -————————> Hard disk
வன்வட்டு :————————> Hard disk

வாய்ஸ் மெயில் – ————————>Voice Mail
விண்டோஸ் விஸ்டா -————————> Windows Vista
விண்டோஸ்,லினக்ஸ்,ஆப்பிள் மேக் -————————> Windows, Linux, Apple Mac
வீட்டுக்கணினி————————>Home PC
வீட்டுத் தொலைபேசி ————————>- Home based Fixed Wired / Wireless phone
வெப்கேமரா————————>Web camera
வேகமான இணைய இணைப்பு ————————>- Fast Internet Connection
ஸ்கைப் ————————>- Skype
ஸ்கைப் உள்ளே / வெளியே————————>Skype In / Skype Out


தினமணி நாளிதழ் தந்த சிறப்பு.                தினமணி நாளிதழில் எங்களின் பெயர்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கும் கட்டுரை ஆசிரியருக்கும்,நாளிதழ் நிர்வாகத்தினருக்கும் சிரம் தாழ்ந்த,மனம் கனிந்த வணக்கங்களும்,நன்றிகளும் கோடி! இந்த புத்தாண்டு பரிசிற்கு நன்றி! வலையுலகம் குறித்த தெளிவைச்சொல்லித்தந்த மதிப்பிற்குரிய முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்களுக்கு நன்றி! நன்றி!


கட்டுரைகள்

வலையுலகப் படைப்பாளிகள்!

First Published : 01 Jan 2010 12:12:00 AM IST


         எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான
 தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, 
அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் 
தலைமுறையின் காலம் கடந்துபோய்க்
கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் 
பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். 
ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள்
குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும்
என்று இன்றையத் தலைமுறை எண்ணிக்
 கொண்டிருக்கவில்லை.
            வலைப்பூக்களில் பெண்களின் 
ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது 
வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள்
 பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது 
சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர்.
 வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், 
அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட,
 தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது 
எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும்
 பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. 
சில பெண் படைப்பாளிகள் அரசியல், 
சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர்.
 ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி,
 தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, 
ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா,
 தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, 
விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற
 நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான,
 அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். 
÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ்
 ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் 
கொண்டு செல்லும் வகையில் சில 
வலைப்பூக்கள் செயல்படுகின்றன. 
மு.இளங்கோவன், இரா.குணசீலன்,
கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா,
 நா.கணேசன், சுப்ரபாரதி மணியன்,
 அழகியசிங்கர் போன்றவர்கள்
 வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். 
கவிதைகள், இலக்கியக் கூடல்கள்,
 புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை
இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
புதன், டிசம்பர் 30, 2009

பாரம்பர்யங்கள்

உனக்கும்
எனக்குமான போர்களில்
எப்போதும்
ஆயுதம் உன் கைகளில்
நானோ நிராயுதபாணியாக

இரக்கமற்ற
உன்
ஆண்மையின் ஆக்ரமிப்பில்
தோற்றுப் போய் காயங்களுடன் நான்

தூக்குமேடையின் முன்
துக்கமுறு பார்வையாளர் போல்
கண்ணீருடன் குழந்தைகள்
இயலாமையால் கட்டுண்டு

அவர்கள் தயாராகிவிட்டார்கள்
மகன் உன்னைப் போலவும்
மகள் என்னைப்போலவும்
அவர்கள் தயாராகிவிட்டார்கள்
மரபணுக்களில் ஊறிய மரபுகளைக் காப்பாற்றி
பாரம்பர்யப் பரம்பரையை வழிமொழிய.....

தமிழ் உச்சரிப்பு


        கண்ணுக்கு மை அழகு.கவிதைக்கு பொய் அழகு.அவரைக்குப் பூ அழகு.அவளுக்கு,அன்னைத்தமிழுக்கு 'ழ' அழகு.தமிழில் இதை சிறப்பு ழகரம் என்கிறோம். எனக்குத் தெரிந்து தமிழிலும்,மலையாளத்திலும் இந்த சிறப்பு ழகரம் உண்டு.மலையாளம் என்பது கொடும் தமிழ் அதாவது தமிழில் இருந்து வந்த மொழி என்கிறார்கள்.அதனால் ழகரமும் தமிழுக்குப் பிறகு தான் மலையாளம் எடுத்தாண்டிருக்க வேண்டும்.ஆனால் தமிழர் ழகரத்தை அதன் அழகோடு உச்சரிப்பதில்லை.மலையாள நண்பர்கள்,அவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, "அம்மை! மழை வருன்னு" என்று அழகுற உச்சரிக்கிறார்கள்.தமிழில் ழகரம் இருந்தால் மட்டும் போதுமா?அதைப் பயன்படுத்துவதில் தானே மொழியின் ஆளுமையும்,பயன்பாடும் என்கிறார்கள் அவர்கள்.

          எங்களின் பால பருவத்தில் எங்கள் தமிழ் ஆசிரியர்கள் மெய்யெழுத்துக்களைச்சொல்லிக்கொடுக்கும் போது 'ல' வை உச்சரிக்கும் போது நாவின் நுனியை பல்லில் படுமாறு உச்சரித்தால் 'லகர' உச்சரிப்பு சரியாகவரும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.அதனை நாங்கள் பல்லு 'ல' என்று நினைவில் வைத்துக்கொண்டோம்.'ள' வை உச்சரிக்கும் போது நாக்கை பல்லுக்கு சற்று மேல் அன்னத்தில் வைத்து உச்சரிக்க அதன் உச்சரிப்பு சரியாகவரும்.'ழ' வை உச்சரிக்கும் போது நாக்கை நன்றாக மடித்து மேலன்னத்தின் உட்புறம் வைத்து உச்சரிக்கத் தானே வரும்.இப்படிப் பாடம் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் மத்தியில் உச்சரிப்பு பற்றிய போதிய கவனமின்றி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களால் உச்சரிப்பு சிதைந்து போகிறது.அந்தமான் தமிழர் சங்கத்தில் பொன்விழா மேடையில் கவிஞர்.திரு.வைரமுத்து அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மாணவிகள் உச்சரிப்பு பிழையுடன் பாட கவிஞர்,உச்சரிப்பின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைத்தார்கள் இப்படி,

"ஔவைக்குக் கூன் அழகு
அவரைக்கு பூ அழகு
அவர்க்கு நான் அழகு
தென்னைக்கு கீற்றழகு
நெல்லுக்கு நாற்றழகு
தமிழுக்கு 'ழ' அழகு என்று எழுதியவன் அல்லவா வந்திருக்கிறேன். அந்த ழகரத்தை ஆசிரியப் பெருமக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் இளம் பிள்ளைகளுக்கு. மொழி ஒலியால் வாழ்கிறது.ஒலி எழுத்தால் வாழ்கிறது.எழுத்தும் ஒலியும் உறவினர்களாக இருக்க வேண்டும்.ழகரத்தை ழகரமாக உச்சரிக்க வேண்டுமல்லவா!"

              உச்சரிப்பிற்கு ஆங்கிலத்தில் 'tongue twister' என்று சொல்வார்களே அப்படிப்பல.அதை தினம் முயன்றாலே உச்சரிப்பு,வேகமான வாசிப்பு பழகிவிடும்.
1.திருவீழிமிழலையில் வீரராகவன்.
2.வாழைப்பழத்தோலில் வழுக்கி கிழவி கீழே விழுந்து இறந்தாள்.
3.மலை வாழைக் குலை ஒன்று
மழையால் மலைச்சரிவில் விழுந்து
பழமெல்லாம் பாழாயின.
4.அலைகடல் மேலே மரவுரல் உருளுது,புரளுது.
5.வாய்க்கா வரப்புல வரகான் தலையில (அறுவடை வயல் பெயர்) ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி.கிழ நரி தலையில ஒரு பிடி நரை முடி.
இதெல்லாம் விளையாட்டாகச்சொல்லிக் கொடுத்தது.இன்று என் பணிக்கு இது மிகவும் உதவுகிறது.தமிழ் ஆசான் களே குழந்தைகளுக்கு இனி உச்சரிப்பையும் வலியுறுத்தி சொல்லிக்கொடுங்கள்.