சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், டிசம்பர் 21, 2009

நனவுகளைக் காதலி

என்
கனவுகளைத் திருடிக்கொண்டு
காலம் போகிறது.
பூக்களைப் பறித்தும்
பூத்துக் கொண்டே இருக்கும் செடிகளைப்போல
கனவுகளும்
உடல் மட்டும் பூமியில்
உலவிக்கொண்டிருக்க
உயிர் ஊடுருவுகிறது பிரபஞ்சங்களினூடே
எங்கும் நான்
நானே எல்லாம்
என்னுள் எல்லாம்
தன்னை மறந்து
சுற்றம் மறந்து
சூழ்நிலை மறந்து
ஆன்மாவின் ராகம் உணரும் போதில்....
அம்மா சொன்னாள்
கனவுகளைக் கலைத்துப்போடு
நேற்று உன்னைப் போல் நான்.
நாளை என்னைப்போல் நீ
கனவுகளில் தொலைந்து போனதில்
கடைசியாய் நானாக...
நீ
நனவுலகைக் காதலி

1 கருத்துகள்:

தமிழ் அமுதன் சொன்னது…

//அம்மா சொன்னாள்
கனவுகளைக் கலைத்துப்போடு
நேற்று உன்னைப் போல் நான்.
நாளை என்னைப்போல் நீ//

அருமை ...!

(உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன்...!)