சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 31, 2009

அடிமைப்பெண்கள்

வாலிபத்தின் வாசலில்
வசந்தக் கனவுகளில் நான்..
பெண்பார்க்கும் படலங்கள் நிறைவுற்று
வரமாலை தந்து வந்தாள் மகாலக்ஷ்மி.

பின் தூங்கி முன்னெழுவார் பெண்கள்.
என்னவளோ பின் தூங்கி பின் எழுந்தாள்.
காலைச்சிற்றுண்டி கடைகளில்.
மதிய உணவு அலுவலக உணவகத்தில்.
மாலை மல்லிகை மணக்க வீடு வந்தால்
என்னவள்
அழுத முகமும் வீங்கிய கண்ணும்
தொலைக்காட்சித்தொடர்களின் உபயம்.
தட்டில் சோறிட்டு
காட்சி கண்டு குழம்பூற்றியது என் கைகளில்.
விளம்பர இடை வேளையில்
இன்னொரு காட்சி மாற்றி
அங்கும் இடைவேளை என்றால் தான்
அதிர்ஷ்டம் எனக்கு அடுத்துச்சோறு கிடைக்கும்.

பட்டுப்புடவை பரிசு தந்தால்
மெட்டி ஒலிநாயகியின் கெட்டி ஜரி இல்லையென்றாள்
நாலு கடை தேடி
நல்ல நகை வாங்கி வந்தால்
என் அபிமானத் தொடர் நாயகியினுடையது நல்ல வடிவு என்றாள்.

இப்படி
நடை ஒரு நாயகி
உடை ஒரு நாயகி
மொழி ஒரு நாயகி
அவள்
அலங்காரம் ஒரு நாயகி.

ஏ! பெண்குலமே!
காலம் மாறுகிறதென்று
கடலும் வானும் கூட மாறுகிறதே!
என்றும்,எப்போதும்,எதற்காவது
அடிமையாவதே உனக்கழகோ?

மாற்றம் கொள்.
சுயம் வளர்க்கக் கல்.
பாரதியே! எழுந்து வா!
உன் புதுமைப்பெண்களை மீட்க...

0 கருத்துகள்: