அந்தமான் தீவுகளின் சுற்றுலாத் துறையினரால்
நடத்தப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி 10 நாட்கள்
நடைபெறும்.இதில் பொருட்காட்சியும்,கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். தாயகம் அறியாத
தீவு வாழ் மக்களுக்குக் கொண்டாட்டமான ஒரு திருவிழா. பொருட்காட்சியில் தனியார்
மற்றும் அரசுத்துறையின் பன்முக வளர்ச்சியை சித்தரிக்கும் மாதிரிகளும்,
பலமாநிலங்களில் இருந்து வந்து வியாபாரக்கண்காட்சி நடத்தும் கைவினைஞர்களும் பங்கு
பெறுவர்.கலைநிகழ்ச்சிகளில் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கில்
நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து கரகாட்டம்,
பொய்க்கால் குதிரை,மயிலாட்டம் மற்றும் பல நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்து
கொள்வார்கள். தீவின் கண்காட்சித்திடலில் மட்டுமல்லாது தமிழர் பெரும்பான்மையாக
வசிக்கும் அனைத்து இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். எங்கெங்கு என்னென்ன
நிகழ்ச்சிகள் என்பதை அரசு செய்தித்தாளில் தினம் பட்டியலிட்டுப் போடுவார்கள்.
அவரவர் விருப்பப்படி கண்டு களிக்கலாம்.உள்ளூர் கலைஞர்களுக்கும் களம் அமைத்துத்
தரப்படும்.ஊரே விளக்கு அலங்காரங்களுடன் கோலாகலமாய்க் காட்சி தரும்.
இந்த வருடம்
27ம் தேதி அதாவது நாளை ஆரம்பித்து 2010, ஜனவரி மாதம், 5ம் தேதி வரை நடை பெறும்.இந்த
விழா ஒன்று தான் இன, மொழி என்ற எல்லைகளைக் கடந்து தீவு மக்கள் அனைவரும்
வரவேற்கும், பங்கு பெறும் ஒரு விழா.விடுமுறை நாட்களில் விலக இடம் இருக்காது.
தமிழன்பர்களே! நீங்களும் எல்லாரும் வாங்க குடும்பத்தோட. எங்க ஊருலயும்
திருவிழா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக