சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 10, 2009

4.ஓங்கே

               
              ஜரவாக்களுக்கு பயந்து காடுகளில் ஒதுங்கி வாழும் இவர்கள் கரிய நிறம், திடமான உடல் வாகு. வானளாவ உள்ள மரங்களில் கூட மந்தி போன்று லாவகமாக ஏறும் ஆற்றல் மிக்கவர்கள்.30 அடி உயரமன வீடுகள் அமைத்து வாழ்கிறார்கள். 28 வயது இளைஞன் 50 வயது பெண்ணை மணக்கும் வாழ்க்கைக் கட்டாயத்தால் இவர்களிடம் மகப்பேறு இன்மை உள்ளது.இவர்களின் முக்கியத்தொழில், வேட்டையாடுதல், தேனெடுத்தல், மீன் பிடித்தல் ஆகியன. களிமண்ணை எச்சில்,நீர்,ஆமைக்கொழுப்புடன் சேர்த்து பசை போல் கலந்து முகத்திலும்,உடலிலும் பூசி ஒப்பனை செய்து கொள்வதில் பெரு விருப்புடைய மக்கள். ஆண்கள் கோமனமும், பெண்கள் இடையில் நார்க்குஞ்சத்தையும் அணிகிறார்கள். இரு பாலரும் மேனியை மூடுவதில்லை.இவர்கள் வாழுமிடம் சிறிய அந்தமான் தீவில் துகாங்கிரீக் என்னுமிடம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றிற்கு 2 அல்லது 3 கிலோ இறைச்சி தேவைப்படுகிறது. 1858ம் ஆண்டு இவர்களின் மக்கள் தொகை சுமார் 700. இன்று இவர்கள் சுமார் 94 பேர்  இருக்கிறார்கள். இவர்களின் முக்கிய உணவு கடல் ஆமை, மீன், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள், பலாப்பழம் ஆகியன. 

          தீவு நிர்வாகம் இவர்கள் தங்குவதற்கு சிமெண்ட் கட்டிடங்கள்,மருத்துவ மனை, ஆரம்ப்பள்ளி ஆகியவற்றையும் உணவு, மருந்துகள்,ஆடை அணிமணிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.இப்போது இவர்கள் கைவினைப் பொருட்களை உருவாக்குகின்றனர்.

0 கருத்துகள்: