சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 29, 2009

தமிழில் அறிவியல் சொற்கள்


                  நமது தாய் மொழி தமிழைத் தனித்தமிழாக வைக்க விரும்பி உலகின் அறிவியல் சொற்களை எல்லாம் தமிழ் படுத்துகிறார்கள்.அப்படித் தமிழ்படுத்தும் போது அடைப்புக்குறிகளுக்குள் அதன் ஆங்கிலப் பெயரை எழுதினால் படிக்கும் இளைய தலைமுறைக்குப்புரிய வாய்ப்புள்ளது. நிறைய கலைச்சொற்களுக்கு பழைய தலை முறைக்கே அர்த்தம் தெரியவில்லை என்பதுதான் உண்மை.இதில் வேதனைப்பட ஒன்றுமில்லை என்றுதான் தோன்றுகிறது.வழக்கில் இல்லாத சொற்களை பேச்சுவழக்கில் கொண்டு வந்து புரிந்து கொள்ள சில கால அவகாசம் தேவைப்படுகிறது.கலைச்சொற்களுக்கு அகராதி இருந்தால் கூட அகராதியை அருகில் வைத்துப் படிக்கும் அளவு பொறுமை இன்று யாருக்கும் இல்லை.இலங்கை வானொலி புகழ் திரு.B.H.அப்துல் ஹமீது அவர்கள் நேர்காணலில் ஒருமுறை "ஒரு அறிவியல் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து அதற்கு தமிழில் பெயர் வையுங்கள்.அதை விடுத்து யாரோ கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு இருக்கும் பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். அது எத்தனை சரியான வார்த்தை. பிறரின் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் வைப்பது எப்படி தெரியுமா இருக்கிறது? அடுத்தவர் பிள்ளைக்கு நாம் பெயர் சூடுவது போல் இருக்கிறது.(தமிழறிஞர்கள் மன்னிக்கவும்)

                தமிழில் தட்டச்சு செய்யும் மென்பொருட்கள் இப்போது அதிகம். இதில் முழுக்க முழுக்க தமிச்சகோதரர்களின் பங்கு இருக்கிறது.அழகி,பொங்கு தமிழ்,இ.கலப்பை இப்படிப் பெயர் வைத்திருப்பது அழகு! தமிழ் அழகு!.இன்றைய கணிப்பொறி உலகில் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பு உலகளாவிய அளவில் இருக்கிறது.அவற்றுக்கெல்லாம் அழகிய தமிழ்ப்பெயர் சூடுங்கள்.உலகச்சந்தையில் சந்தைப்படுத்த வேண்டி பிற மொழிப்பெயர் சூடுவதைத் தவிர்க்கலாமே!

1 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

உங்கள் கட்டுரை அருமை....அறிவியல் கலைச் சொற்களை எனக்கு அனுப்பி வைத்த நண்பர்ருக்கு நன்றி அதை உங்களின் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்.