சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 16, 2009

தமிழ் மாணவர்களே! NITயில் கல்வி பயிலுங்கள்






          இன்றைய இளைஞர்களின் கனவு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி பயில்வது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் +2 இறுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று. சில மாணவர்கள் புத்தகத்தை அப்படியே மனனம் செய்து அதை அப்படியே விடைத்தாளில் பதிவு செய்வார்கள். சில மாணவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும் அவர்களால் மதிப்பெண்கள் ஈட்டுவது என்பது இயலாது போய்விடும்.70% முதல் 80% வரை மதிபெண் பெறும் மாணவர்களே புத்திக்கூர்மையும் படைப்புத்திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

       அப்படிப்பட்ட மாணவர்கள் தங்களது குறைந்த மதிபெண்களால் சிறந்த கல்வி நிறுவங்களில் இடம் கிடைக்கவில்லை என்று வருந்தத்தேவையில்லை. +2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே போதுமானது.All India Engineer's Entrance Examination (AIEEE) என்ற நுழைவுதேர்வு எழுதித் தரப்பட்டியலில் முன்னால் வருபவர்களுக்கு இந்திய அரசின் NIT மற்றும் பல முண்ணனி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற இயலும்.
        இந்தியா முழுவதிலும் மொத்தம் 20 NIT-க்கள் உள்ளன.தமிழகத்தில் கூட திருச்சியில் ஒரு NIT உள்ளது.NITயில் படித்த மாணவர்களுக்கு அரசு நிறுவங்களிலும்,சர்வ தேச அரங்கிலும்நல்ல வேலை வாய்ப்பிற்கு இடமுண்டு. இந்த AIEEE தேர்வின் பாடத்திட்டம் IIT நுழைவுத்தேர்வைப்போல் மிககடினமாகஇராது. இயற்பியல், வேதியியல், கணிதம் இந்த மூன்று பாடங்களில் இருந்தும் மாணவர்கள் +2 ல் படித்த அதே பாடத்திட்டத்திலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படும்.
         2008,2009 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் கூட
 இந்தத் தேர்வை எழுதலாம்.2010ம் வருடம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்விற்கான தேர்வு மையங்கள் இந்தியாவில் 84 மற்றும் துபாய் 1 ரியாத் 1.இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவங்கள் சின்டிகேட் வங்கிகள் மற்றும் பல இடங்களில் கிடைக்கும்.இணையத்திலும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் மாதம் 31ம் தேதி. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறுவது அவசியம். சென்னை போன்ற நகரங்களில் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. ஒரு மாதப்பயிற்சி அளிக்கிறார்கள். இந்தப் பயிற்சியில் நீங்கள் தேர்வை எப்படி எதிர் கொள்வது, விடை அளிப்பது எப்படி? மாதிரி வினாத்தாள்களில் பயிற்சி என்று உங்களைத் தேர்வுக்கு தயார் செய்கிறாகள். வருடம் முழுவதும் படித்தும் கோட்டை விட்ட மாணவச்செல்வங்கள் இந்த ஒரு
மாதப்பயிற்சியில் தளராத முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் முயன்றால் கோட்டையைப் பிடித்து கொடி ஏற்றும் வாய்ப்பு உள்ளது.
          அந்தமான், நிகோபார் தீவுகளைப் பொறுத்த வரையில் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளுக்கான இட ஒதுக்கீடு AIEEE யில் முன்னணி பெறும் மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.மதிபெண்களின் அடிப்படையில் அல்ல.கடந்த வருடம் இந்தியா முழுவதிலும் இருந்து 10,10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். இது ஒரு உலக சாதனை
.


மேலும் விபரங்களுக்கு http://aieee.nic.in என்ற 
வளைத்தளத்தில் சென்று பாருங்கள்.


0 கருத்துகள்: