எனது கவிதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்கும் அன்பர்கள் அந்தக்கவிதைகளில் உள்ள துக்கமும்,சோகமும் எனதென்று பரிதாபத்துடன் பின்னூட்டம் அளிக்கிறார்கள்.இறையருளால் அந்த துக்கத்தின், சோகத்தின் சொந்தக்காரி நான் அல்லள்.கல்வி பெறமுடியாமல்,கல்வி பெற்றிருந்தாலும் விழிப்புணர்வு இல்லாமல்,இரண்டும் இருந்தாலும் குடும்பத்தின் அமைதிக்காக அத்தனையையும் சகித்துக் கண்ணீரை மட்டுமே சிந்தி வெதும்பும் பல சகோதரிகளின் ஒட்டுமொத்தக்குரல் அது.வெளியில் நல்லவர்களாய் முகம் காட்டி வீட்டுக்குள் அசுர முகம் காட்டும் மனிதர்களால் குழந்தைகளுடன் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத சகோதரிகளின் ஈனக்குரல் அது.மான அவமானத்திற்காக வெளியில் சிரித்து உள்ளுக்குள் புழுங்கும் சகிப்புத்திலகங்களின் சோகக்குரல் அது. எங்கள் வீடுகளுக்கு அருகில் இப்படிப் பலகுரல் கேட்கிறது. அவர்களுக்கு உதவ முடியாத ஆதங்கத்தை வலைப்பூவில் பதிவு செய்கிறேன்.நன்றி!
செவ்வாய், டிசம்பர் 29, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக