நிக்கோபார் தீவுகள் நிக்கோபாரிகளின் நிலம்.அரசாங்கமே கேட்டாலும் ஓர் அங்குல நிலம் கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாது.இன்றும் நம்மவர்கள் நிக்கோபார் தீவுகளில் வணிகத் தலங்களை நடத்தி வருகிறார்களென்றால் கடையின் உரிமை அவர்களின் பெயரில் தான் இருக்கும்.நாம் அந்தக் கடைகளில் பொருளைப் போட்டு விற்று எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் நம்மவர்கள் அவர்க்ளுக்குத் தேவையான பொருட்களைத்தந்து கொப்பரை,பாக்கு,சாம்பிராணி மற்ற காடுகளில் கிடைக்கும் பொருட்களை பண்டம் மாற்று முறையில் ஆனால் பணமதிப்பில் பெற்று வருவார்கள்.தென்னையும்,கமுகும்,பன்றிகளும் தான் அவர்கள் சொத்து.அதற்கு ஆதாரம் அந்த நிலப்பரப்பு.ஆகவே அவர்கள் தங்களது நிலத்தை,நிலத்தின் உரிமையை யாருக்கும் தரமாட்டார்கள்.அவர்களிடையே ராணி ஆட்சிக்குப் பிறகு கேப்டன் ஆட்சி நடந்து வருகிறது.ஒரு சமயம் கார்நிக்கோபாரின் முதன்மைக் கேப்டன் குடியரசு நாள் அணிவகுப்பை காண புது தில்லி சென்றிருந்தார். அங்கு அப்போதைய பாரதப் பிரதமர்.ஜவஹர்லால் நேருவை சந்தித்தார்.
இந்திய விமானப்படைத்தளத்தை விரிவாக்கம் செய்ய உங்களுடைய நிலம் வேண்டும். அதற்கு என்ன விலை என்று நேரு அவர்கள் கேட்க உடனே முதன்மைக் கேப்டன் முகத்தில் புன்னகையுடன் ,"எனக்குப் பணம் வேண்டாம். நீங்கள் அணிந்திருக்கும் இந்தக் கருப்புக்கோட்டைத் தந்தால் போதும்" என்று கோட்டைக்காட்டிச்சொன்னாராம்.உடனே நேருஜியும் தான் அணிந்திருந்த கோட்டை கழற்றித் தந்து தற்போது நிக்கோபார் தீவில் இந்திய விமானப்படை தளம் அமைத்திருக்கும் இடத்தை வாங்கினார் என்கிறது தீவு வரலாறு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக