சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், டிசம்பர் 07, 2009

1.பெரு அந்தமானியர்
                       ஸ்டிரைட் தீவில் வசிக்கும் இவர்கள் கரி போன்ற கருப்பு நிறம் கொண்டவர்கள்.குள்ளமானவர்கள். சராசரியாக ஆண்கள் 4 அடி 11 அங்குலம் உயரமும்,பெண்கள் 4 அடி 7 அங்குலம் உயரமும் கொண்டவர்கள்.தலை முடி கம்பளி போன்று சுருண்டு இருக்கும். அவர்களின் தோல் மென்மையானது.ஒளிவீசும் கண்கள்.பெரு அந்தமானியர்களுக்கு கலை உணர்வு அதிகம்.தங்களை அழகு படுத்திக்கொள்ள ஒரு வகைக் களிமண்ணை மாவாக்கி கோலம் பொடுவது போல் உடலெங்கும் வளைந்த நெளிந்த கோடுகளை வரைந்து தம்மை ஒப்பனை செய்து கொள்கிறார்கள். கடலில் நீந்துவதில் வல்லவர்கள்.மீன் பிடித்தல், பன்றி வேட்டை, காடுகளில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள் முதலியவற்றைத் திரட்டுவது இவர்களது தொழிலாகும்.இவர்களின் உணவு மீன், கடல் ஆமைகள், கடல் ஆமை முட்டைகள்,டுகாங்க்(இது அந்தமானில்மட்டும் காணப்படும்ஒருகடல்பசு                                 கடல் நண்டுகள், காடுகளில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள்,காட்டுப் பன்றிகள் ஆகியன.

       பகலில் ஓடியாடி உணவு தேடும் இவர்கள் இரவில் ஆட்டம் பாட்டம் ஆனந்தமான வாழ்க்கை. அடர்ந்த காடுகளில் கூட்டு வாழ்க்கை. கிராமத்தில் 14 அல்லது 15 குடிசைகள் இருக்கும்.இவற்றில் சுமார் 50 முதல் 80 பேர் வரை குடியிருப்பார்கள்.1858 ம் ஆண்டு 3500 பேராக இருந்த இந்தப் பழங்குடியின் மக்கள் தொகை இப்போது 41 பேர் இருப்பதாக அந்தமான் நிர்வாகச்செய்தி கூறுகிறது.இப்போது அவர்களின் கிராமங்களும் அழிந்துவிட்டன.இவர்கள் தான் தீவுக்கு முதன் முதலில் ஆங்கிலேயர்கள் வந்த போது அவர்களுடன் மூர்க்கமாகப் போரிட்டு தோற்றனர். ஆங்கிலேயர்களுடனான இவர்களது போர் தீவு வரலாற்றில் அபர்டீன் போர் என்று வர்ணிக்கபடுகிறது.


           இப்போது இவர்கள் தங்களது உணவுத் தேவைகளுக்கென காய்கறிகள் பயிரிடுகிறார்கள்.ஆரோக்கியமற்றதண்ணீர்,உணவுப்பழக்கம் மற்றும் பழங்குடி இனத்தவர் அல்லாத வெளியுலக மக்களுடன் பழகும் போது உண்டாகும் நோய்த் தொற்று இவர்களை அழிவை நோக்கி செலுத்தியுள்ளது. ஆழி சூழ் கடல் நடுவே உள்ள இத்தீவுகளில் இப்படி ஒரு இனம் வாழ்கிறது என்று உலகம் அறிந்து கொள்ள ஏதுவாக இவர்களை அந்தமான், நிகோபார் நிர்வாகம் போற்றிப் பாதுகாக்கிறது.

0 கருத்துகள்: