மாற்றம் தேவை என்று
மனதைத் தேற்றிக் கொண்டு
காற்று வாங்கி வர
கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
பரந்த மணலைப் பார்த்ததும்
முன்னர் நீ
வரைந்த என் பெயரை
அலை அழித்துச்செல்லுமே அந்த ஞாபகம்
கொறிப்பதற்கு வாங்கிவந்து
என் பங்கைத் தந்துவிட்டு
நீயோ மீன்களுக்குத் தருவாயே! அந்த ஞாபகம்
காற்றை ரசித்து,கடலை ரசித்து
கடைசியில் என்னை ரசித்தது...
நான்
கடவுளின் வரம் நீயென்று அகம்
கனத்துத் திரிந்தது அந்த ஞாபகம்
இப்போதெல்லாம்
நமக்குள்
ஊடறுக்கும் தந்திரங்கள்
உறவற்றுப்போகிறதே? கவனித்தாயா?
வரங்களைச்சாபமாக்கி
வன்முறை ஏவிவிட்டு
வருத்தத்தை ஒற்றை வார்த்தையில் பிரதிபலிக்கிறாய்!
புரிகிறது எனக்கு.
புத்திசால் மனைவி வேண்டும்
புத்தி கொஞ்சம் மட்டாய் வேண்டும் உன்னைவிட
படித்த மனைவி வேண்டும்
பட்டம் ஒன்று குறைவாய் வேண்டும் உன்னை விட
காலாவதியாகிப் போன இந்த
கசட்டு எண்ணங்களைக் களைந்தெறி.
உன் மரபணுக்களில்
ஊறிப்போன மரபுகளில் இருந்து மீட்பதற்கு
உன்
மௌனத்தை உடைக்க
நானே தோற்றுப்போகிறேன்
ஞாயிறு, டிசம்பர் 20, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
என்ன ஒரு அருமையான நடை.
உள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை.
அருமை.
கருத்துரையிடுக