சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 30, 2009

பாரம்பர்யங்கள்

உனக்கும்
எனக்குமான போர்களில்
எப்போதும்
ஆயுதம் உன் கைகளில்
நானோ நிராயுதபாணியாக

இரக்கமற்ற
உன்
ஆண்மையின் ஆக்ரமிப்பில்
தோற்றுப் போய் காயங்களுடன் நான்

தூக்குமேடையின் முன்
துக்கமுறு பார்வையாளர் போல்
கண்ணீருடன் குழந்தைகள்
இயலாமையால் கட்டுண்டு

அவர்கள் தயாராகிவிட்டார்கள்
மகன் உன்னைப் போலவும்
மகள் என்னைப்போலவும்
அவர்கள் தயாராகிவிட்டார்கள்
மரபணுக்களில் ஊறிய மரபுகளைக் காப்பாற்றி
பாரம்பர்யப் பரம்பரையை வழிமொழிய.....

0 கருத்துகள்: