சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், டிசம்பர் 21, 2009

ஒரு பெண்ணின் கனவுகள்

எனக்கே சொல்வதற்கு வெட்கம் தான்

இந்த
கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
காலம் புரியாது
புதுப்புது உலகத்தை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்னுள்

ராஜாங்கத்தின் இளவரசியாக
அதிகாரியின் மகளாக
ஒரு நாள் குதிரையில்
ஒரு நாள் காரில்
ஒரு நாள் அரண்மனையில்
ஒரு நாள் மாளிகையில்
சேனைகளைப்பார்த்து
ஆணையிடும் நாயகியாய்

எனக்கே சொல்வதற்கு வெட்கம் தான்

ராஜகுமாரக்கனவில்
ஒரு நாள் பால் தீயும்
ஒரு நாள் சோறு குழையும்
என் கனவுகள் மட்டும் நின்றபாடில்லை

முதல் சுயம்வரத்தில் குடும்பம் பிடிக்கவில்லை
இரண்டாம் சுயம்வரத்தில் மாப்பிள்ளை சரியில்லை.
மூன்றாம் சுயம்வரத்தில் பேரம் படியவில்லை
நான்காம் சுயம்வரத்தில் என்னை யாரும் கேட்கவில்லை
நானும்
என் கனவுகளைச்சொல்லவில்லை

1 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

உங்கள் கவிதை மனதை தொட்டது.