சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 22, 2009

ஒரு மனைவியின் மூடத்தனம் (!)

பின் தூங்கி முன் எழுந்து
பிள்ளைகளின் போர்வை திருத்தி
அடுப்படி நுழைந்தால்
அலுவலகம் போகும் வரை பம்பரமாய்.
நீயோ
காபியுடன் பத்திரிக்கை
காலையின் அழகை ரசித்தபடி.
உணவு முதல் உடுப்பு வரை
உனது ஆணைப்படி
உன்
ஆணைகளுக்கு அடிபணிந்தே தினம்
அலுவலகம் செல்கிறேன் தாமதமாய்
சம்பளதினத்தன்று மட்டும்
சந்தோஷம் காண்பிப்பாய்
தினக்கூலிக்கு போயிருக்கலாமோ?


தினம்,தினம் போர்கள்
போர்களைத்தொடங்க
உனக்குத் தான் எத்தனை காரணங்கள்
குழம்பில் உப்பில்லை தொடங்கி
அறை ஒழுங்கில்லை வரை
உனக்குத் தான் எத்தனை காரணங்கள்
இல்லத்தை நீ
போர்க்களமாக்கும் போது
நானோ
அமைதியை நிலைநாட்ட
அன்பைக் கண்களில் ஏந்தி..

இத்தனைக்குப்பிறகும்
உறங்கி விடுகிறாய்
உறுத்தலின்றி.
நானோ
உட்கார்ந்திருக்கிறேன்
உன் போர்களுக்கான காரணங்களை
உருவாக்கிக் கொடுக்கும்
என் மூடத்தனத்தை நொந்தபடி.


2 கருத்துகள்:

தேவன் சொன்னது…

எவ்வளவு எளிமையா எளிய தமிழ்ல எழுதி இருக்கீங்க.

நல்லா இருக்குங்க.

கண்மணி/kanmani சொன்னது…

நல்லாயிருக்குங்க
ஆனால் போரில் நம் பக்கம் ஞாயமிருந்தால் பின்வாங்கக் கூடாது