கூரையில்
தொட்டில் கட்ட உயரம் போதாதென்று
மரக்கிளையில் தொட்டில் கட்டி
தாலாட்டும் தாயின் கண்களில்
மக்களைப்பற்றிய மகாராஜக்கனவுகள்.
பற்றுப்பாத்திரம் துலக்கி
கையின் ரேகைகள் அழிந்தும்
வீட்டின்
வறுமை ரேகை அழிக்கமுடியாத
தாயின் கண்களில் மின்னும் தாய்மை
தன் மக்களைப்பற்றிய பேச்சில்
கனத்த உறக்கத்தின்
கனவுகளும்
கண்திறந்த போதுகளில்
கற்பனைகளும்
மக்களால் மேன்மையென்ற
நம்பிக்கையில் நாட்களை
நகர்த்தும் தாய்களின் பிள்ளைகள்
மதுக்கடை வாசலின் நீண்ட வரிசையில்...
வெள்ளி, ஜனவரி 01, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக