சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 04, 2010

அரங்கேறும் அந்தரங்கங்கள்


தகளியில் பிம்பம் கண்டு
தலையாட்டுகிறது மனது.
அலங்காரம் அங்கீகரிக்கப்பட்டது
அழகின் திருப்தியில்
அகமெங்கும் கர்வம் பரவ
முகமெங்கும் விகசித்தது புன்னகை

நாற்பது வயதிலும்
நரையில்லையா? என்ன சாயம்?
முகம் மின்னுகிறதே
என்ன பூச்சு?
விளம்பரங்களால்
அம்பலப்படுத்தப்படும் அலங்கார ரகசியங்கள்.

ஆணுறையும் நாப்கின் களும்
மறைத்தொளிக்கும் வீடுகளில்
நடுவீட்டில் கடைபரப்பும்  ஊடகங்கள்,
விளம்பரங்களாய்...

கேள்வி கேட்பவன் ஞானி என்ற நான்
கேட்கும் என் குழந்தைகளின்
கேள்விகளுக்கு பதிலே சொல்வதில்லை.
ஏனென்றால்
அந்தக்கேள்விகள் அத்தனையும்
சொல்ல முடியாப் பதில்களின் வினாக்கள்

அந்தரங்கம் எதுவுமற்ற இந்த
சமூகத்தின் சாலைகளில்
தலை குனிந்து நடக்கும் நான்,
யாருடைய
கண்களில் தெரியுமோ?
பதில் சொல்லமுடியாக்கேள்விகள் என்ற பயத்துடன்.

0 கருத்துகள்: