சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 01, 2010

அந்தமானுக்கு சுற்றுலா வர்றீங்களா?






          இயற்கை என்பது நமது இருப்பைக் காக்கும் இறை.அதனால் தான் இளங்கோவடிகள் தமது காப்பியத்தை ஞாயிறு போற்றுதும் என்று ஆரம்பித்ததாக சான்றோர் கூறுவர்.அந்தமானில் மின்னாமல் முழங்காமல் மழை அருவி மாதிரிக்கொட்டும்.மனித சக்தியால் அழிக்க முடியாதக்காடுகளை உடைய ஒரு பூமி.மாமழை போற்றத் தெரியாத மனிதர்கள் அந்தக் காடுகளையும் அழிக்கிறார்கள்.எத்தனை சட்டங்கள் போட்டும்,எத்தனை பாதுகாப்புப் போட்டும் என்ன பயன்? பட்டுக்கோட்டையாரின் திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கிற கதை தான்.விளைவு பத்து மாத மழை,எட்டு மாதமாகி,ஆறு மாதமாகி,இப்போது மூன்று மாதமாகிவிட்டது.முக்கிய பூமி எங்கும் புயல்,சூறாவளி என்று மழை கொட்ட இங்கோ மூன்று மாத மழையுடன் கருமேக முற்றுகையை அந்தமான் வானம் காணவேயில்லை.இங்கு மழை இல்லாவிட்டால் காடுகள்,சுற்றுலா எதுவும் அற்று மீண்டும் இருண்ட தீவுகள் என்ற பழைய நிலைக்குத் தீவுகள் தள்ளப்பட்டுவிடும்.மக்கள் ஊரைக் காலி செய்து கொண்டு ஓட வேண்டியது தான்.தன் தாயின் மடியிலேயே கை வைக்கும் இந்தத் (மரம்) திருட்டு மனிதர்களை நினைத்தால் கோபம் பொங்குகிறது.நாளை என்ன செய்வோம் என்ற எதிர்கால பயத்தோடு தான் வாழ்க்கை நகர்கிறது.சொர்க்க பூமியையே சிலகாலத்தில் பாலையாக்கிவிட்ட சுயநலக்காரர்கள்.முக்கிய பூமியில் தான் காப்பியங்களில் சொல்லப்படும் மருதம்,முல்லை காணாமல் போய்,குறிஞ்சியின் வளங்களைப் பறித்து மொட்டை மலைகளாய் விட்டு,நெய்தல் கரைகளைக் கழிப்பிடங்களாக்கி,பாலை விரிகிறது என்றால் தீவுகளையும் நாசமாக்கி வருகிறார்கள்.

               அந்தமானின் இயற்கை காட்சிகள் இயற்கை விரும்பிகளுக்கு பெரிய வரம்.கவிதை வாசமே அற்றவர்களைக்கூட கவிஞனாக்கும் அழகி.கண்களால் அள்ள முடியாத அழகுக்குவியல் இந்த மரகதத்தீவுகள்.தமிழன்பர்களே! அந்தமான் தீவுகளுக்குச்சுற்றுலா வர மனம் துடிக்குமே! வாருங்கள்,வாருங்கள்.இருகரம் கூப்பி அழைக்கிறோம்.யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.சில குறிப்புகள் உங்கள் நலனுக்காக இதை ஏன் தெரியுமா அடிக்கோடிட்டேன்.உங்களைப் பயமுறுத்த அல்ல.சில முன்னெச்சரிக்கைக்காக.வான் வழிப்பயணம் என்றால் உங்கள் அடையாள அட்டையை பத்திரமாக வைத்திருக்கவும்.கடல் வழிப்பயணம் என்றால் நீங்கள் வந்த பயணச்சீட்டையும் பத்திரமாக வைத்திருப்பது நலம்.இங்கு திருட்டு பயம் கிடையாது.பெண்கள் நடு இரவிலும் சாலைகளில் நடமாட இயலும்.(நிஜம்மாங்க)ஆனால் தவறவிடப்பட்ட எந்தப்பொருளும் திரும்பக்கிடைப்பது சிரமம். அவரவர்க்கு அவரவர் வேலை முக்கியமாக இருப்பதால் தேடிக் கொண்டு சேர்ப்பது அரிது.உணவு,தங்குமிடம்,நல்ல தண்ணீர்,நல்ல காற்று இதற்குப் பஞ்சமில்லை.ஆனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உடைகளை கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கொண்டு தான் நடக்கவேண்டும்.உங்கள் உடைகள் பத்திரம்.பேருந்து நிற்கப் போகும் போது அல்லது நின்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு அருகில் சட்டென்று கடந்து செல்வது கூடாது.என்ன வித்தியாசமான எச்சரிக்கைகள் என்கிறீர்களா? பான் (வெற்றிலை + பாக்குக்கலவை) போட்டு துப்புவதற்கு இன்ன இடம் தான் என்ற விவஸ்தையின்றி எங்கும் துப்பி வைத்திருப்பார்கள்.பல நாட்டவர்களும் சுற்றுலா வரும் இடம் என்ற உணர்வின்றி வெற்றிலை போடுபவர்கள் செய்யும் அநியாயம்.இறைவனுக்கு அடுத்து அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருப்பது இதுதான்.இளைஞர்கள் முதல் வயதானவர் வரை வாயில் வெற்றிலை எச்சிலுடன் கொழ கொழவென்றுதான் பேசுவார்கள்.எந்த அலுவலகம்,வங்கிகள்,பொது இடங்கள் போனாலும் மாடிப்படிக்கட்டு மூலைகள் பார்க்க சகிக்காது. நிர்வாகத்தினரும் சுவாமி படங்களை எல்லாம் ஒட்டி வைத்தாலும் சுவாமி படங்கள் காணாமல் போய்,வெற்றிலை எச்சில் நிரந்தரமாய்.இதற்கு ஒரு சட்டம் போடமாட்டேன் என்கிறார்கள்.ஒரு வேளை தீவில் சட்டம் இயற்றுபவரும் பான் பழக்கம் உள்ளவரோ?

                  நகர் வலம் வரும்போது மட்டும் தான் இந்த அவலங்களை நீங்கள் சந்திக்க நேரும்.மற்ற படி கடற்கரைகள் சுத்தமோ சுத்தம்.சென்னை மெரினாவை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியாத அளவு இருக்குமே அப்படி ஒரு கடற்கரையுடன் ஒப்பிடும்போது அந்தமான் கடற்கரை சொர்க்கம்.முத்துமணல் விரிப்பில் சோறு பரப்பி உண்ணலாம்.குப்பைகள் போட குப்பைக் கலன்கள்,உங்களின் அனைத்து உதவிகளுக்கும் அரசுப் பணியாளர்கள் கடற்கரையில் காத்திருப்பார்கள்.முகம் சுளிக்காது வழிநடத்துவார்கள்.உங்களிடம் இருந்து எந்தப் பண உதவியும் எதிர்பார்க்கமாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்.கொடுப்பவர் கொடுத்தால் பெறுபவர்கள் உண்டு.(அட! ஒரு குவாட்டருக்கு ஆச்சு) அந்தமானை விட்டுக் கிளம்பும்போது எதையோ விட்டுப்போவது போல் துக்கமாகும்.அது தாங்க உங்க மனசு.அப்புறம் ஒண்ணுங்க! பான் விவகாரத்த மனசுல வச்சுக்காதீங்க.நண்பர்கள் கிட்டயும் அந்தமான் அழகச்சொல்லுங்க.அவலத்த மறந்துடுங்க.ஏன்னா இந்த மக்கள் ரொம்ப நல்லவங்க.

10 கருத்துகள்:

தமிழ் அமுதன் சொன்னது…

நல்ல பதிவு....! நான் பிறந்ததும் ,நான்காம் வகுப்புவரை படித்ததும் அந்தமானில்தான் ..!
இந்த பதிவும்,நீங்கள் எழுதும் அந்தமானை பற்றிய மற்றபதிவுகளும் என் சிறுவயது நினைவை மீட்டு வருகின்றன...! நன்றி மேலும் தொடருங்கள்...!

பெயரில்லா சொன்னது…

appadiye oru rendu-moonu photo potta nalla iruukum

சுடுதண்ணி சொன்னது…

அழைப்புக்கு மிக்க நன்றி.. சமயம் அமையும் போது கண்டிப்பா வர்றோம் :)

passerby சொன்னது…

Dear Mrs KNSL,

Why should one preserve one's air or ship ticket? Why should I show my identity when I travel within India? Imagine I travel to Mumbai from Chennai by air, or by train. Should I wander or walk in the city keeping my air or train ticket safely with me always? No.

It would be better if you could give me the following information:

On arrival by ship, where can one go to find a safe place to stay, like budget hotel? Where can one get tourist information; and arrangement for sight seeing on arrival?

Suppose one wants to have a south indian meal,is there hotels in port blair for that? Where do Tamils live in the city so that one can go to their area and see how they live? Their habits and their temples and churches?

Do schools there teach Tamil as a language?

I am not able to type in Tamil, so pl bear with me; and you can post your replies in Tamil.

Thank you.

Paleo God சொன்னது…

அட இந்த பதிவ இப்பதாங்க படிச்சேன்:) நான் உங்க கிட்ட கேக்கணம்னு இருந்தேன்.. அந்தமானுக்கு கண்டிப்பா வரனுங்க அதுவும் என் காமராவோட.. ::))

sunderji சொன்னது…

jathikalattra andamanukku vara aasaithan. kalaachara kalappum uravukalil kalappum jathikalai azhikkiratho?

துபாய் ராஜா சொன்னது…

கண்டிப்பா வர்றோம்.பேக்கேஜ் டூர் ஏதும் இருக்கிறதா, யார் சிறப்பான வசதி அளிக்கிறார்கள், எத்தனை நாள், கட்டண விபரம் ஆகியவற்றை இன்னொரு பதிவில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

pudugaithendral சொன்னது…

என் கனவுத்தீவுக்கு கூப்பிட்டிருக்கீங்க.எப்படியும் ஒரு நாள் வருவேன்

puduvaisiva சொன்னது…

மற்ற நண்பர்கள் கேட்டது போல் மற்ற விபரங்களை தரவும்.

நன்றி!


மானத்துக்கு எடுத்துக்காட்டு காவரிமான்
பான் சுவர் ஓவியத்து எடுத்துக்காட்டு அந்தமான்... தத்துவம் - 716/2010.©

:-))))))

jothi சொன்னது…

//கண்டிப்பா வர்றோம்.பேக்கேஜ் டூர் ஏதும் இருக்கிறதா, யார் சிறப்பான வசதி அளிக்கிறார்கள், எத்தனை நாள், கட்டண விபரம் ஆகியவற்றை இன்னொரு பதிவில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.//

நான் கூட,.. முக்கியமான இடங்கள், ஆகக்கூடிய செலவு, எத்தனை நாள் தேவைப்படும் போன்ற தகவல்களையும் அளித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் நண்பரே,.