அந்தமானில் தமிழர் திருநாள் தாய்த்தமிழ் நாட்டின் மரபுப்படி,உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.எனக்கு இந்த வருடப்பொங்கல் மிக்க சிறப்பு வாய்ந்த ஒன்று.வலைப்பூவில் எழுதும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே.ஒவ்வொரு வருடமும் அந்தமான் தமிழர் சங்கம், அந்தமான் தமிழர்களுக்கு பொங்கல் போனஸ்,சித்திரை விழா போனஸ் தருவதுண்டு. எப்படி என்கிறீர்களா? தாய்த்தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அழைத்து நிகழ்ச்சிகளை சிறப்பு செய்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர்.கடந்த ஞாயிறன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் மகளீர் மற்றும் மாணவிகளுக்கான கோலப்போட்டி,பள்ளிக்குழந்தைகளுக்கானஓவியப்போட்டி,வினாடிவினா,பேச்சுப்போட்டி ஆகியன நடந்து முடிந்திருக்கிறது.(நா கோலப்போட்டிக்கெல்லாம் போறதில்லங்க.யாருக்கும் பரிசு கெடைக்காது பாருங்க.அதுனால) இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டுப்புறப்பாடல் பாடி பரிசு வாங்கி வந்தேன்.(நெசமாங்க) இந்தப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர் திருக்கரங்களால் பரிசுகள் வழங்கப்படும்.
தை மாதம் முதல் நாள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சங்க வளாகத்தில் பொங்கல் வைத்து படைத்து பின் மாலை 5.30 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கும். இந்த வருடம் பொங்கல் விழாவிற்கு தலைமை ஏற்க அந்தமான்,நிகோபார் பொதுவினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை இயக்குனர் திரு.A.நெடுஞ்செழியன் அவர்களும்,சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் புது தில்லி சிறப்பு பிரதிநிதி சொல்லின் செல்வர் கம்பம்.P.செல்வேந்திரன் அவர்களும் இசைந்துள்ளார்கள். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் சிறப்புரை ஆற்றுவார்.தமிழ் நண்பர்களே! வாங்க இந்த வருசம் பொங்கலுக்கு எங்க ஊருக்கு.எல்லாருக்கும் மனசு நெறஞ்ச பொங்கல் நல்வாழ்த்துகள்.
உலகமெலாம் பருவ மழை பருவத்தே பொழியட்டும்.
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
அமைதியும் அன்பும் அவணியெலாம் தழைக்கட்டும்
நலமுடனே நல்லோர் வாழ பொங்கட்டும் பொங்கல்
வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை சிறக்க பொங்கட்டும் பொங்கல்.
3 கருத்துகள்:
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
காரைக்குடியில் இருந்து அங்கு போய் வாழ்வர் போல் தெரிகிறதே? உண்மையா?
பொங்கல் வாழ்த்துகள்
தமிழர் வாழும் இடமெல்லாம், மறக்காமல் தமிழர் திருநாளை கொண்டாடுவோம். உழவரை மறக்காமல் வாழ்த்துவோம். அன்பான தமிழர் திருநாள் வாழ்த்துகள்
கருத்துரையிடுக